காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் கல்லறைக்கூட காதலைத் தடுக்க முடியாது என்று காண்பித்திருக்கிறார், வியட்நாமைச் சேர்ந்த இந்த விசித்திர மனிதர்.
காதலியோ, மனைவியோ இறந்துவிட்டால் அவள் நினைவுகளுடனும், நிழற்படங்களும் வாழ்க்கை நடத்துகிற காதல் நாயகர்களைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இறந்து போன மனைவியின் சடலத்தைத் தோண்டி எடுத்து, அதை பொம்மையாகச் செய்து, அதனுடனேயே தன் முழு வாழ்க்கையை வாழ்ந்துகொண்டுகொண்டிருக்கிறார், 55 வயதான திரு.லீ வான்.