உலகம் முழுக்கவே இருக்கும் ஒரு பிரச்னை. அதில் காமெடி சேர்த்து எல்லோருக்கும் அதன் தீவிரத்தைப் புரிய வைத்திருக்கும் படம்தான் ஜேக் கஸ்டன் இயக்கியிருக்கும் 'செக்ஸ் டேப்'. படத்தின் பெயரைக் கேட்டதும் இந்த படத்தைப் பார்த்தேன் என்று சொல்லக்கூடத் தயங்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனால், படம் கூறியிருக்கும் விஷயம் நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் படிப்பது தான்.
கேமரூன் டயஸும், ஜேசனும் காதல் திருமணம் செய்தவர்கள். திருமணத்துக்கு முன் அவர்களுக்குள் இருந்த தாம்பத்ய உறவு
திருமணத்திற்குப் பின் குழந்தைகள் வந்த பிறகு மெள்ள, மெள்ள குறைகிறது. நாளை நாளை என நாட்கள் நகர ஒரு கட்டத்தில் குழந்தைகளை தன் தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு கணவனை அழைக்கிறார் டயஸ். நெடுநாள் கழித்து இணையப் போவதால் கொஞ்சம் வித்தியாசமா முயற்சி செய்யலாம் என்று தாங்கள் உறவு வைத்துக் கொள்வதை அப்படியே வீடியோவாகப் பதிவு செய்கின்றனர். விளையாட்டாக செய்யும் அந்த வீடியோவின் விபரீதம் பின்னால் தான் தெரிகிறது.
ஜேசன் தன் நண்பர்களுக்கு அளித்த ஐ-பேடில் அவர்கள் எடுத்துக் கொண்ட வீடியோ தொழிநுட்பக்கோளாறால் பகிரப்படுகிறது. அங்கிருந்து தொடங்கும் காமெடி அத்தியாயங்கள் சிரிக்க வைத்தாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை அச்சத்துடன் புரிய வைக்கிறது. கேமரூன் டயஸும், ஜேசனும் அந்த ஐ-பேடைக் கைப்பற்ற இரவு முழுக்க ஒவ்வொரு வீடாக அலைவது முழுக்க காமெடி கலாட்டாதான். இறுதியில் அவர்களின் வீடியோ முற்றிலுமாக அழிக்கப்படுவதாக படம் முடிகிறது. இது வெறும் திரைப்படம் என்பதால் ஒரு நல்ல முடிவாக அமைந்தது. ஆனால் நிஜ வாழ்வில் இது சாத்தியமா? சற்று யோசித்துப் பாருங்கள்!
இந்த சைபர் உலக குற்றங்களில் நாம் கணிக்க முடியாத; முன் எச்சரிக்கை கொள்ள முடியாத பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நன்றாகவே அறிவோம். வைரஸ் பரப்புவது, தகவல்களைத் திருடுவது என்பதாக தொடரும் இந்த திருட்டை நம் அந்தரங்கத்துக்குள் நுழைய வாய்ப்பளிப்பது மிக ஆபத்தானது. எவனோ ஒருவன் கேமராவை மறைத்து வைத்து இருவரின் அந்தரங்கத்தைப் படம் பிடிப்பதே ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே குலைக்கும் வாய்ப்பிருக்கும்போது, தெரிந்தே அந்த செயலை செய்வது மிக மிக ஆபத்தானது.
’சும்மா விளையாட்டுக்குத்தானே... ஒருமுறை பார்த்துவிட்டு அழித்துவிடலாம்’ என நீங்கள் நினைக்கலாம். என்னதான் அதை அழித்தாலும், மீண்டும் அந்த ஃபைல்களை மீட்கவும், தவறானவர்கள் கைகளில் சிக்கவும் 100-ல் 95 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று தன் எச்சரிக்கையை காமெடியாக முன் வைக்கிறது 'செக்ஸ் டேப்!' அதைக் காமெடியாக அல்ல மிகப்பெரிய எச்சரிக்கையாகவே புரிந்து கொள்ள வேண்டும்!
- பா.ஜான்ஸன்

No comments:
Post a Comment