
காலம் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பார்த்திபன் கேரக்டர் பற்றி?
வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கி றேன்! அவ்வளவு அழுக்கு!!!
கொஞ்சம் கொஞ்சமாய்.. பட்டு.. படுத்தி.. உடுத்தி.. களைந்து.. துவைத்து.. கரைந்து.. குறைந்து.. இன்னும் இருக்கிறது மனதில்.
சுத்தமாய்ப் போய்விடும்- போவதற்குள்...
நீங்கள் திரைப்படத் துறைக்கு வந்திராவிட்டால்?
முயற்சித்துக்கொண்டிருப்பேன் - 2024-லும்.
உங்கள் ஆசை எது? பேராசை எது?
ஆரம்பத்தில் பேராசைகளே ஆசைகளாய் இருந்தன. சினிமாவிற்குள் நுழைய திக்குதிசையோ, தகுதி தராதரமோ அச்சமயம் ஏதுமில்லை எனத்தெரிந்தும் கொஞ்சமும் அச்சமோ, கூச்சமோயின்றி நடிப்புக்கான விருதுகளை வாங்க கையில் நமைச்சல் எடுத்ததும்.. ஹன்ற்ர்ஞ்ழ்ஹல்ட் போட பென்சிலில் கூட மை வழிந்ததும் பேராசை எனப் புரியாமலே ஆசைப் பட்டேன். இன்று ஞநஈஆத எனும் பேராசையின் பெயரைக்கூட ஆசையென்றே மாற்றிக்கொண்டேன்.
மனதில் ஈரமாக இருக்கும் பால்ய காலம் குறித்து?
காய்ந்ததுதான் இன்னமும் ஈரமாக இருக்கிறது. பால்ய காலத்தில் பசியின் மாறுபட்ட தாக்கத்தில் வயிறு காய்ந்தது தான் நினைவின் ஓரமாய் - ஈரமாய் எப்போதும். அவமானம் அறியாத பால்ய காலத்தைவிட மீசை அரும்பத்தொடங்கிய பருவகாலத்தில் பசி தீர்க்கப்படாத வேளைகளில் கை ஏந்தவும் தன்மானம் இடம்கொடுக்காமல் கூனிக்குறுகி தாழ்வு மனப்பான்மையுடன் நடக்கையில் நம்மைக் கடந்துபோகும் ஒரு தாவணி விசிறி விட்டுப் போகும் புன்னகைத் தென்றல் மனதை கொத்திப்புண்ணாக்கிவிடும். வயித்துக்கே வழியில்லாத நமக்கு "அதுக்கும் கீழ ஒரு பிரச்சினை தேவையா?' என்ற சமாதான சங்கை ஊதிக்கொண்டே, மனம் மயானமாய் கனக்கும். என் மன வானொலியை ஒரு குறிப்பிட்ட அலைவரிசைக்குள் கொண்டுவந்தால் அந்த சோக கீதங்களை இப்போதும் கேட்கலாம்.
உங்கள் இளம்வயது நண்பர்கள் யார்? அவர்களுடன் தற்போது தொடர்பில் இருக்கிறீர்களா?
எனக்குத் தெரிந்து ஒரு இளம்வயது நண்பன் எனக்கு நான் மட்டுமே. அநேகபொழுதுகளில் அவனும், நானும் பிரிவதேயில்லை. அவன்தான் என்னை update-ல் வைத்திருக்கும் அற்புதன். சில வேளைகளில் ஒரு byepass பிரிந்து மீண்டும் இணைவதுபோல நாங்கள் இருவரும் உடைந்து ஒன்றுகூடுவதுண்டு. அவ்வேளைகளில் அவனைப் பார்க்கும்போதெல்லாம் ஒருவித ஆதங்கமே அடர்த்தியாய் மனதில் தங்கும். கொஞ்சம்கூட கள்ளம், கபடமில்லாமல் தனக்கு அதீத அறிவில்லை என்றும் அறியாமல், வெறும் வேட்கையை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமாவில் ஜெயித்துவந்த அவனின் உத்வேகம் எப்போதுமே எனக்கு ஆச்சரியம். இந்த சினிமா கிரகத்தில் முதலடியிலேயே கொடிநாட்டி இவ்வளவு தூரம் நடந்தும், எத்தனையோ கடந்தும் இன்னும் இலக்கை அடையவில்லை என்ற வேதனையை வெல்லப்போவது அந்த உற்ற நண்பனை உள்ளிருத்தியே.
அட!
காதெட்டும் தூரத்தில் ஒரு கைதட்டல் கேட்கிறதா?
அது... அதே... அந்த... நண்பேன்டா!
அம்மா- அப்பாவை நினைக்கும்போது?
அப்பாவை மட்டுமே நினைவில்கொண்டிருக் கிறேன். அம்மா பார்வையிலேயே இருப்பதால்..
விடலைப் பருவத்தில், உங்களைப் பிடித்து ஆட்டிய அழகான ராட்சஸி பற்றி?
அவள் என்னை விடலை.
என் கண்ணை விடலை.
என் மனசை விடலை.
இன்னமும்...
விடலைப்பருவம் என்றால் என்ன என்று என் உதவியாளர் ஸ்ரீகாந்த்திடம் கேட்டேன். "வயது பதின்மூன்றிலிருந்து பதினெண்கீழ்கணக்கே அது' என்றார். "அதற்கு பின்வந்தும் இன்னும் விடலை மனசை என்றால் அதுவும் விடலைப் பருவம்தானே?' என்றேன் நான். "இவ்வளவு அக்'குறும்பாய்' யோசிக்க உங்களால் மட்டும்தான் சார்முடியும்' என்றார் ஸ்ரீ.
குறும்பாய் சிரித்து, கரும்பாய் இனித்து “இன்னும் விடலை ராட்சசிகள்’’ ஏகமாக இருக்கிறார்கள், இன்னமும் இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கும்போது எதற்கு கணக்கு முடிந்ததுபோல ஒரு பாவனை.
வேண்டாமே!
எப்போது கவிதை எழுத ஆரம்பித்தீர்கள்? முதல் கவிதை நினைவிலிருக்கிறதா?
ஒருநாள் அதிகாலையில் நண்பகல் போலிருந்த காகிதத்தில் கவிதை எழுத ஆரம்பித்தேன்.
முதல் கவிதை நினைவிலிருக்கிறது.
புகழ் மகுடத்தை சுமப்பது சுமையா? சுகமா?
Autograph கையெழுத்துப் போட என் பேனாவே நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைந்ததைத் தெரிந்திருந்தும், அந்த camera மின்னல்வெட்டாவது நம் முகத்தில்பட்டுச் சிதறாதா? என்று அல்பமாய் அலைந்ததை அறிந்திருந்தும் அதற்காக கோடானகோடி வேண்டுதல்களோடு இன்று அது நிறைவேறி யிருக்கும் நிமிடத்தில் புகழ்மகுடம் சுமையே என்று நான் கூறினால்...
காறித் துப்புமே என் மனசாட்சி.
"புதியபாதை' பார்த்திபன்- "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' பார்த்திபன் -ஒப்பிடுங்கள்?
"புதிய பாதை'க்கு முன் பார்த்திபன்: நிலாவைப் பிடித்துத்தரச்சொல்லி சோறூட்டும் அம்மாவிடம் விவரமின்றி ஆசைப்பட்டவன்.
"கதை திரைக்கதை வசனம் இயக்க'த்திற்குப்பின் பார்த்திபன்: ஏற்கெனவே நிலாவில் கால்பதித்த ஆழ்ம்ள்ற்ழ்ர்ய்ஞ் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்னும் ள்ற்ழ்ர்ய்ஞ்-காகப் போராடுபவன்.
திரையுலகில் மறக்கமுடியாத காயம் உண்டா?
பெருங்காயம் உண்டு. ஆனால் இப்போது மனம் பழைய பெருங்காய டப்பாவாய் அடிக்கடி அந்த சோகவாசம் வீசும். இப்போதெல்லாம் 'காயமே அது பொய்யடா' எனப் புரிந்ததால் காயத்தை மட்டுமல்ல அதன் தழும்பைக்கூட பக்கு படாமல் பிய்த்துப் போட்டுவிட்டு ம்...ம் ய்ங்ஷ்ற்' என கிளம்பிவிடுகிறேன்.
உங்களை எல்லையற்ற மகிழ்ச்சியில் மூழ்கடித்த தருணம் எது?
இப்-பொழுதும்
எப்-பொழுதும்
தருணங்களால் மகிழ்ச்சியடைதலன்றி, மகிழ்ச்சியாய் தருணங்களை மாற்றுவதே
தற்பொழுதின் நோக்கம்.
கிறுக்கல்கள்’ நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தமிழ்ச் சமூகத்தால் புரிந்துகொள்ளப்பட்டதா?
எனக்குப் புரிந்ததை மட்டும் அதில் பதிந்தேன். 50,000 பிரதிகள் விற்று அது சாதனை புரிந்தது. புரியாமல் எப்படி புரியும்?

நீங்கள் ரசித்த புத்தகம்?
பரீட்சை எழுத, படிக்கச் சொன்ன புத்தகங்களைத் தவிர மற்ற அத்தனையும்.
வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன்- உங்கள் பார்வையில்...?
அவர்கள் பார்வையில் பார்ப்பதெல்லாம் கவிதை.
என் பார்வையில் அவர்களே கவிதை.
எவருக்கும் தெரியாத ஒரு ரகசியம் சொல்லுங்களேன்; உங்களைப் பற்றி?
எனக்கே தெரியாதுன்னா அந்த ரகசியம் எவ்ளோ பெருசா இருக்கும்னு பார்த்துக்கோங்களேன்!
அழகுக்கும் கவர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?
Blouse-க்கும், Bra-க்கும் உள்ள வித்தியாசம்தான்.
எதிலும் புதுமை, புரட்சி என அதிரடி செய்கிறீர்களே, எப்படி?
என்னுடைய இயக்கத்தில் அடுத்து வெளிவரப் போகும் படத்தை பார்த்தால் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். (இதுதான் வியாபார உத்தி).
No comments:
Post a Comment