இதனிடையே பில்கேட்ஸ் இணையம் மூலம் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இணையத்தின் முகப்பு பக்கம் என்று வர்ணிக்கப்படும் ரெட்டிட் இணைய சமூகத்தால் நடத்தப்படும் ஏ.எம்.ஏ ( என்னை எதுவும் கேட்கலாம்) நிகழ்ச்சி மூலம் நடந்த இந்த நேர்காணலில், பில்கேட்ஸ் மனம் திறந்து பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவர் , ஆங்கில மொழி மட்டுமே பேசத் தெரிந்ததற்காக தன்னை முட்டாளாக கருதுவதாக தெரிவித்தார். பள்ளியில் லத்தீன் மற்றும் கிரேக்கம் கற்க முயன்று விட்டுவிட்டதாக கூறிய அவர், பிரெஞ்சு, அரபிக் அல்லது சீன மொழியை கற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
வாழ்க்கையில் நீங்கள் செய்யாதது என நினைத்து வருந்தும் செயல் ஏதேனும் உண்டா என கேட்டபோது இவ்வாறு அவர் கூறினார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் சீன மொழியை பேச கற்றுக்கொண்டதற்காகவும், சீன மொழியில் அவர் கேள்வி- பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றதை பார்த்து வியப்பதாகவும் கேட்ஸ் மேலும் தெரிவித்தார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் பற்றி பதில் அளித்த கேட்ஸ், அடுத்த 30 ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் இருக்கும் என்றும் கூறினார்.
இயந்திர மனிதர்கள் வழக்கமான வேலைகளை செய்யும் நிலை உருவாகும் என்று கூறிய பில் கேட்ஸ் , அவை சூப்பர் அறிவு பெறாமல் முட்டாளத்தனமாக இருப்பதையே விரும்புவதாகவும், இயந்திரங்கள் அறிவு ஆற்றல் பெறுவது கவலையான விஷயம் என்றும் தெரிவித்தார்.
- சைபர்சிம்மன்

No comments:
Post a Comment