போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Sunday, December 28, 2014

கைநிறைய சம்பளம் தரும் ஆப்ஸ் டெவலப்மென்ட் !

து ஆப்ஸ் யுகம். இணையத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் தேடி அலைந்து கண்டுபிடிப்பதைவிட, சில நிமிடங்களில் உங்கள் வேலையை முடித்துக்கொள்ள பல ஆப்ஸ்கள் இன்று நடைமுறைக்கு வந்துவிட்டன. சினிமா டிக்கெட் வாங்குவதில் தொடங்கி பீட்ஸா ஆர்டர் செய்வதுவரை அனைத்தும் ஆப்ஸ்ஸில் அடக்கம். ஒருநாளில் நடக்கும் தூரம், தெரியாத இடத்துக்குச் செல்லும் வழி, உண்ணும் உணவின் கலோரிகள், படிக்க வேண்டிய செய்திகளின் தொகுப்பு, மளிகைச் சாமான்களை வாங்க என இன்றைக்கு ஆப்ஸ்களின் பயன்பாடு பல வழிகளிலும் நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.

இந்த ஆப்ஸ்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, இதற்கென்று தனி படிப்பு இருக்கின்றதா, அப்படிப் படித்தால் வேலை கிடைக்குமா, சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்பது பற்றி தெரிந்துகொள்ள சென்னையில் உள்ள ஜேபிஏ சொல்யூஷன்ஸின் மேலாளர் ரஞ்சனியைச் சந்தித்தோம்.

ஆங்கிலம் அவசியம்!
“இந்த ஆப்ஸ் டெவலப்மென்ட் சம்பந்தமாகப் படிக்க, பொறியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சார்ந்த மற்ற இளங்கலைப் படிப்புகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேறியவர்களைத்தான் சேர்த்துக்கொள்கிறோம். இந்தப் படிப்பைப் படிக்க கட்டாயமாக கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந் திருக்க வேண்டும். ஏனென்றால், ஆப்ஸ்களைத் தயாரிக்கத் தேவையான கோடிங்ஸ் பற்றி தெரிந்துகொள்ள ஆங்கிலம் மிகவும் அவசியம்.
சில நிறுவனங்கள் ஒவ்வொரு மாணவரையும் தனியாக நேர்முகத் தேர்வு செய்து அவர் களின் தன்னம்பிக்கை எப்படி இருக்கிறது, குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந் தாலும் அவர்களின் அறிவு மற்றும் திறமை எப்படி இருக்கிறது, அவர்கள் ஆப்ஸ் டெவலப்மென்ட்டில் என்ன கற்க விரும்புகிறார்கள், அன்றைய தேதியில் இருக்கும் கேட்ஜெட் களும், ஆப்ஸ்களும் வந்திருப்ப வருக்கு எத்தனை பரிட்சயமாக இருக்கிறது, இந்தப் படிப்பிலிருந்து அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது போன்றவைகளைத் தெரிந்துகொண்டுதான் சேர்க்கின்றன.
 கவனிக்க வேண்டியது!
ஆப்ஸ் தொடர்பான படிப்புகளில் சேரும்முன், அந்தப் படிப்பை வழங்கும் நிறுவனம் எந்த அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு இருக்கிறது, எந்த அமைப்புகளிடமிருந்து உரிமம் பெற்றிருக்கிறது, ஆண்ட்ராய்டு ஆப்ஸ் டெவலப்மென்ட் கோர்ஸ்களை வழங்குகிறது எனில்,  அந்த நிறுவனம் ஆண்ட்ராய்டு சர்ட்டிஃபிகேஷன்கள் ஏதாவது பெற்றிருக்கிறதா, ஐபோன்களுக்கான ஆப்ஸ் படிப்புகளை வழங்குகிறது எனில், ஆப்பிள் ஆப்ஸ் ஸ்டோரில் கணக்கு வைத்திருக்கிறதா, எத்தனை மென்பொருள் நிறுவனங்களோடு வேலைவாய்ப்புச் சம்பந்தமாக ஒப்பந்தங்கள் செய்திருக்கிறது, ஆசிரியர்கள் மென்பொருளில் அப்டேட்டாக இருக்கிறார்களா அல்லது ஆசிரியர்கள் டெக்னாலஜி சம்பந்தமான பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்துக்கொண்டே பகுதி நேரமாக  வந்து கற்றுத் தருகிறார்களா என்பதை எல்லாம் ஆராய்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்.
 தெரிந்திருக்க வேண்டியது!
இன்றைக்கு SMAC என சுருக்கமாகச் சொல்லப்படும் S - Social media, M - Mobility, A - Analytics, C - Cloud computing என இந்த நான்கு விஷயங்கள் ஐ.டி நிறுவனத்தில் வேலைக்குச் சேர நினைப்பவர் களுக்கு அவசியம் தெரிய வேண்டும். ஒரு நல்ல ஆப்ஸைத் தயாரிக்க இந்த நான்குமே நன்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த நான்கு விஷயங்கள் குறித்தும் ஆப்ஸ் டெவலெப்மென்ட் கோர்ஸ்களில் பயிற்சி வழங்கப்படுகிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐஓஎஸ் அப்ளிகேஷன்களுக்கு அதைப் பற்றிய அறிமுகம், அப்ஜெக்ட்டிவ் சி, எக்ஸ் கோடு என்விரான்மென்ட், மேப் & லொகேஷன், கோர் டேட்டா கான்செப்ட்ஸ் மற்றும் ஸ்விஃப்ட் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்களைத் தயாரிக்க ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன்கள் பற்றிய அறிமுகம், ஜாவா கான்செப்ட்ஸ், டேட்டா ஸ்டோர், புராஜெக்ட் ஸ்ட்ரக்சர், லாலிபாப் வெர்சன், அட்வான்ஸ்டு யூஐ டிசைன் ஆகியவை கற்றுத்தரப்படுகின்றன. விண்டோஸ் ஓஎஸ் இயங்குதளத்தில் அப்ளிகேஷன்களைத் தயாரிக்க ஆப்ஸ் ஃப்யூச்சர்ஸ், யூஐ புரொடக்‌ஷன், டேட்டாக்களோடும் ஃபைல் களோடும் வேலை பார்ப்பது, நெட்வொர்க்குகளை இணைத்தல் மற்றும் வெப் சர்வீசஸ் ஆகியவைகள் கற்றுத்தரப்படுகின்றன. இவை அனைத்தும் ஆப்ஸ் டெவலப்மென்ட்டுக்கு மிகவும் அடிப்படை யானவை. கோர்ஸ்களை வழங்கும் நிறுவனத்தின் பாடத் திட்டத்தில் இவைக் கட்டாயம் இருக்க வேண்டும்.
 இரண்டு வகை ஆப்ஸ்!
ஆப்ஸ்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று, நேட்டிவ் (Native); மற்றொன்று ஹைபிரிட் (Hybrid). இதில் நேட்டிவ் என்பது ஒரு ஆப்ஸ் எந்த இயங்குதளத்தில் இயங்க தயாரிக்கப்பட்டதோ, அந்த இயங்குதளத்தில் மட்டும்தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக, ஆப்பிள் ஸ்டோர் எனும் ஆப்ஸை ஆப்பிள் ஐபோன்களைத் தவிர வேறு எதிலும் பயன்படுத்த முடியாது. ஹைபிரிட் ஆப்ஸ் என்றால், அந்த அப்ளிகேஷனை எந்த இயங்குதளத் திலும் பயன்படுத்தலாம்.
உதாரணமாக, ஃபேஸ்புக். இந்த ஆப்ஸானது ஐபோன், ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என்று எந்தத் தளத்திலும் பயன்படுத்த முடியும். இதில் எந்த வகையான ஆப்ஸ்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, அதுவும் குறிப்பாக, எந்த இயங்குதளத்தில் தயாரிக்கப்படும் ஆப்ஸ்களை எளிதில் ஹைபிரிடாக மாற்ற முடியும் என்பதை எல்லாம் படிக்கும் காலத்தில் தெரிந்து கொள்வது நல்லது” என்று ஆப்ஸ்களின் வகைகளை யும் அதன் தன்மைகளையும் விளக்கினார்.
 அப்டேட் அவசியம்!
படிக்கும் காலத்தில் செய்கின்ற அஸைன்மென்ட், புராஜக்ட் போன்றவைகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டு முடிவில் படிப்பு வழங்கும் நிறுவனம் படிப்பை முடித்ததற்கு அத்தாட்சியாக சான்றிதழ் வழங்குகிறதா, அந்தச் சான்றிதழ்களை யார் வழங்கு கிறார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். புராஜெக்ட்டில் அல்லது அஸைன்மென்ட்டுகளில் நாம் செய்த ஆப்ஸ்கள் சரியான இயங்குதளங்களில் அப்லோடு செய்யப் பட்டுப் பயன்படுத்தப்படுகிறதா, ஆப்ஸ்களுக்கு மக்களிடமிருந்து என்ன மாதிரியான ரிவியூக்கள் வருகின்றன என்பதை எல்லாம் லிங் எடுத்து, வேலைக்குப் போகும்போது நம் ரெஸ்யூமேயில் இணைத்துக் கொள்ளலாம்’’ என வேலைக்கான டிப்ஸ்களைச் சொல்லி முடித்தார் ரஞ்சனி.
முக்கியமாக, தற்போது மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாணவர்கள் தங்களை முழுமையாக தொழில்நுட்ப ரீதியில் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தற்போது ஐபோனில் CNC++ என்கிற மொழிதான் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால், இதை மாற்றும் வகையில் ஷிஃப்ட் (SHIFT) என்று ஒரு மொழி தற்போது ஐபோன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி புதிதாக வரும்போது அதை உடனடியாக அப்டேட் செய்துகொள்ள வேண்டும்.
 சம்பளம் எவ்வளவு?
இந்தப் படிப்பை படித்த பிறகு தொடக்கத்தில் இந்திய மென்பொருள் நிறுவனங்களில் 8,000 - 12,000 வரை சம்பளம் கிடைக்கும். இதுவே, ஆறு மாதங்கள் புராஜெக்ட் பணி அனுபவத்தோடு சென்றால், 20,000 முதல் 25,000 வரையிலும் கிடைக்கும். அதற்குப்பின் பணியில் உள்ள முதிர்ச்சி, திறமையைப் பொறுத்து சம்பள உயர்வுகள் இருக்கும். இதுபோன்ற கோர்ஸ்களைப் படித்தால், ஐஓஎஸ் அப்ளிகேஷன் டெவலெப்பர், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் டெவலப்பர், டெஸ்டிங் பொறியாளர், விண்டோஸ் அப்ளிகேஷன் டெவலப்பர், சாஃப்ட்வேர் டெவலப்பர் போன்ற பணிகளில் சேரலாம்.
டிசிஎஸ், காக்னிசன்ட், இன்ஃபோசிஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் சில ஆப்ஸ் டெவலப்மென்ட் கோர்ஸ்களை வழங்கும் நிறுவனத்தோடு இணைந்து கேம்பஸ் டிரெயினிங் மற்றும் வொர்க்‌ஷாப்களும் நடத்துகின்றன. அதில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களை அந்த நிறுவனங்களே வேலைக்கு எடுத்துக் கொள்கிறது. ஹெச்சிஎல், ஐஹார்ஸ் டெக்னாலஜீஸ், டெக்னோசாஃப்ட் கார்ப்பரேஷன், சுப்ரீம் ஐ.டி சொல்யூஷன்ஸ், நோக்கியா, டிசிஎஸ் என்று பல நிறுவனங்கள் இந்த கோர்ஸ்களை முடித்தவர்களுக்கு வேலை தரத் தயாராக இருக்கின்றன.

கட்டணம் எவ்வளவு?
தோராயமாக 15,000 ரூபாய் முதல் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் டெவலப்மென்ட் கோர்ஸ்கள் கற்றுத்தரப்படுகிறது. ரூபாய் 20,000 முதல் ஐபோன் ஆப்ஸ் டெவலெப்மென்ட் படிப்புகளும், 22,000 முதல் விண்டோஸ் ஆப்ஸ் டெவலப்மென்ட் படிப்புகளும் சொல்லித்தரப் படுகிறது. குறைந்தபட்சம் மூன்று மாத கால படிப்புகளாக இருந்தால் நல்லது’’ என்று கூறி முடித்தார் ரஞ்சனி.
இந்தக் கட்டணம் மற்றும் படிப்புகளின் கால அளவு நிறுவனத்துக்கு நிறுவனம் பாடத் திட்டத்தைப் பொறுத்து மாறுபடுகிறது. சில வெளிநாட்டு ஆப்ஸ் டெவலப்மென்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட இயங்குதளத்தின் அடிப்படையில் தொடங்கி, இன்றைய தேதி வரை அந்த இயங்குதளத்தில் இருக்கும் அனைத்தையும் கற்றுத் தருகிறது.
அதுபோன்ற நிறுவனங்களில் சேர்வது சற்று கடினமானதாகவும், கட்டணங்கள் மிக மிக அதிகமாகவும் இருக்கும். பல நிறுவனங்கள் வார இறுதியிலும், வார நாட்களிலும், ஆன்லைன் டிரெயினிங், கார்ப்பரேட் டிரெயினிங் என்று பலமுறைகளில், மாணவர்களுக்கு வசதியான நேரங்களில் படிப்புகளை வழங்குகின்றன என்பது கூடுதல் சிறப்பு.
இணையத்தில் விருப்பமுள்ள இளைஞர்கள் இந்தப் படிப்பைப் படித்து தங்கள் திறமையை இன்னும் கூர்தீட்டிக் கொள்ளலாமே!
மு.சா.கெளதமன் படங்கள்: மீ.நிவேதன்.

No comments:

Post a Comment