2014-ல் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஒரு திருமணம் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சிப் பேரலைகளும் சட்ட விவாதங்களையும் கிளப்பியது. தற்போது அது ஒரு முடிவினை எட்டியுள்ளது. அப்படி என்ன அதிசயத் திருமணம்?


பிறப்பின் அடிப்படையில் டேவிஸ் ஓர் ஆண் என்று குறிப்பிட்டிருந்தது. “ஓர் ஆண் ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதானே ரஷ்ய சட்டம்” என்று டேவிஸ் கேட்க, திருமணப் பதிவாளரும் ஆமோதித்துள்ளார். பின்னர் திருமணமும் நடை பெற்று இருவரையும் மீடியாவின் கண்ணில் படாமல் பின்வாசல் வழியாக அனுப்பி வைத்துள்ளனர்.
“பிறப்பில் நான் ஆணாக இருந்தாலும் உடலின் அடிப்படையில் நான் ஆன்ட்ரோஜீன்ஸ் என்கிற வகையில் ஆணும் பெண்ணும் அற்ற தன்மையானவன். எனக்கு அலிசன் ப்ரூக்ஸ் என்கிற இந்தப் பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியது. அந்தப் பெண்ணுக்காக அவளைப்போலவே மாற நான் சீனா சென்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்துவந்தேன். திருமணம் செய்ய ஆசைப்பட்டபோது ரஷ்ய சட்டம் ஓரினச் சேர்க்கைக்கும் திருமணத் துக்கும் தடையாக இருந்தது. ஆனால், அதே சட்டத்தில் சான்றிதழ்படி ஆணும் பெண்ணும் திருமணம் செய்யத் தடையில்லை என்று இருந்தது எங்கள் இருவருக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது” என்றார் டேவிஸ்.

ஆனாலும் ‘இந்தத் திருமணத்தை சட்டப்படி செல்லாது’ என்று அறிவிக்க வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்துக்குச் சென்றார்கள். ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனவரியில் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததில் தம்பதி செம ஹேப்பி.
தள்ளுபடி செய்ததோடு நிறுத்தாமல் ‘‘வேண்டுமானால் சட்டத் திருத்தம் கொண்டு வாருங்கள்” என்றும் சொல்லிவிட்ட தால், ‘ரஷ்ய அரசு சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தே ஆக வேண்டும்’ என்று போர்க்கொடி தூக்குகிறார்கள் சிலர்!
- செந்தில்குமார்
No comments:
Post a Comment