''விளையாட்டும், குறும்பும் குழந்தைகளின் அடையாளம். ஆனால், இன்றோ, ஆடல், பாடல், வாத்தியங்கள், சமையல், கைவினை பொருட்கள் என பல கலைகளை கற்று தேர்ந்த குழந்தைகளே, 'சூப்பர் குழந்தை'களாக அடையாளப்படுத்தப்படுகின்றனர். ஆனால், இதற்காக அவர்கள் பணயம்
சமீபத்தில், ரியாலிட்டி ஷோ ஒன்றில், தன் குழந்தை சரியாக பாடவில்லை என்று அம்மா மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். 'இது ஒரு போட்டி' என்ற தெளிவு அம்மாவுக்கே இல்லாதபோது, சின்ன குழந்தைகளுக்கு எப்படி புரியும். 'இதுதான் கடைசி வாய்ப்பு இதில் நாம் தோல்வி அடைந்து விட்டோம். இனி நமக்கு வாழ தகுதியில்லை. மற்றவர்களை போல பரிசுகளை வெல்ல நாம் திறமையானவர் இல்லை' என்று குழந்தை மனதளவில் பாதிக்கக் கூடும். இதுவே, மன உளைச்சலையும், தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்திவிடும்.
சில பெற்றோரிடம், 'உங்க குழந்தையை, ஏன்... இப்பவே டான்ஸ், பாட்டு, யோகான்னு சேர்க்கறீங்க' என்று கேட்டால் 'வலது பக்க மூளையை தூண்டி சிறப்பாக வேலை செய்ய வைத்து, புத்திசாலியான குழந்தையாக வளர்க்க போகிறேன்' என்கின்றனர். 'செயற்கையான முறையில் வலது பக்க மூளையை எதற்காக தூண்டி விட வேண்டும்' என்று கேட்டால், அவர்களிடம் பதில் இல்லை. செயற்கை முறையில் மூளையை தூண்டி விட அபக்கசும், சிலம்பமும் தேவையே இல்லை. குழந்தையை அவர்கள் போக்கில் விளையாட விட்டாலே போதும். மூளை சிறப்பாக வேலை செய்யும்.
எந்த வயதில் கலைகள் கற்க வேண்டும்?
குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டு, மனதில் தெளிவாக பதியும் படி விளையாட்டு மூலமாகவும், செயல்திறன் மூலமாகவும் கற்பிக்க வேண்டும். 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எழுத, வரைய சொல்லி தரக் கூடாது. அதன் கைவிரல்கள் நீண்ட நேரம் வளைந்து வேலை செய்யக்கூடிய அளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்காது. முன்பெல்லாம் யோகா, பரதம், பாட்டு, ஓவியம் போன்ற கலைகளை கற்றுக் கொள்ள ஆரம்ப கால வயது எட்டு. ஆனால், இன்றோ 3 வயது குழந்தைகூட ஒவியங்களை வரைகிறது. பாட புத்தகங்களை முதுகில் பொதி போல சுமக்கிறது. இப்படி குழந்தையை ஒரு கலைஞனாக மாற்றுபவர் முதலில் குழந்தை வளர்ப்பு கலையை பயின்ற பிறகு, குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம். பிறகு வளர்க்கலாம்.

எது சரியான பாட திட்டம்?
பின்லாந்தில் குழந்தைகளுக்கு பாட புத்தங்கங்கள் கிடையாது. விளையாட்டு மற்றும் கற்பனை திறன் மூலமாக அவர்களுக்கு பாடம் நடத்தப்படுகிறது. இத்தகைய முறையே குழந்தையை சிறப்பாக மாற்றக் கூடும்.
குழந்தைகளுக்கு எது முக்கியம்?
குழந்தைகள் பேச, எழுத, படிக்க மட்டும் தெரிந்துக் கொண்டால் போதாது. சுவை, நிறம், மணம், தொடுதல் போன்ற உணர்வுகளையும் அறிந்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைகளும் ஒவ்வொரு தனித்துவத்தை கொண்டவர்கள். அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப துறைகளையோ, கலைகளையோ கற்றுக் கொள்ள, வாய்ப்பளிக்க வேண்டும். அதுவும் சரியான வயதில் மட்டுமே. விளையாட்டால் ஏற்படும் நன்மைகள் நிரந்தரமானவை, இயற்கையானவை. விளையாடும் போதுதான் குழந்தைகள் படைப்பு திறன், ப்ராப்ளம் சால்விங் ஸ்கில்ஸ் போன்றவற்றை கற்றுக் கொள்வர். விளையாட்டைவிட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நல்ல பழக்கம் வேறு எதுவும் இல்லை'' என்கிறார்.
- ப்ரீத்தி

No comments:
Post a Comment