சந்தேகமாக இருந்தால், உங்கள் பாஸ்வேர்டு என்ன ? எனும் யூடியூப் வீடியோவை பார்க்கவும். இந்த வீடியோ உங்களை சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
ஏனெனில் இதே கேள்வியை பலரிடம் கேட்டு அவர்களது பாஸ்வேர்டை கேமிரா முன் சொல்ல வைத்திருக்கிறது இந்த வீடியோ. பலரும் தங்களை அறியாமல் பாஸ்வேர்டை சொல்லிவிட்டு பின்னர் நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிவதை பார்த்தால் ஐயோ பாவம் என இருக்கும். ஆனால் யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம் என்பதுதான் பாஸ்வேர்டு நிதர்சனம்.
இமெயில் உள்ளிட்ட இணைய சேவைகளுக்கு டிஜிட்டல் பூட்டாக பயன்படும் பாஸ்வேர்டு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்றால் அதை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பது எல்லோரும் அறிந்தது தான். ஆனால் இந்த புரிதலை மீறி பலரும் பாஸ்வேர்டை கேட்டதும் சொல்லிவிடும் தன்மை கொண்டிருக்கின்றனர் என்பது தான் வேதனையான உண்மை.
புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மெல் இதை தனது நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா சைபர் பாதுகாப்பு பற்றியும், ஹேக்கிங் போன்றவற்றை முறியடிப்பது பற்றியும் சமீபத்தில் பேசினார். இதை குறிப்பிட்ட ஜிம்மி கிம்மெல், சைபர் பாதுகாப்பு தொடர்பாக பயனாளிகள் எந்த நிலையில் இருக்கின்றனர் என்பதை அறிய அவர்கள் பாஸ்வேர்டை கேட்டுப்பார்க்கலாம் என்று கூறிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பலரிடம் பாஸ்வேர்டை கேட்டு அந்த பதிலை கேமிராவில் பதிவு செய்திருக்கிறார்.
ஆச்சர்யப்படும் வகையில் அல்லது அதிர்ச்சி அளிக்கும் வகையில் பலரும் பளிச் என்று தங்கள் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர். உதாரணத்திற்கு முதலில் கேட்கப்பட்ட பெண்ணிடம், சைபர் பாதுகாப்பு பற்றிய நிகழ்ச்சி இது, உங்கள் பாஸ்வேர்டு என்ன என்று கேட்டதும், அவர் எனது செல்ல நாய் மற்றும் பள்ளி படிப்பு முடித்த ஆண்டு சேர்ந்தது என்று கூறிவிட்டு, அடுத்த கேள்விகளுக்கு நாயின் பெயர் மற்றும் பள்ளி ஆண்டை பதிலாக அளித்திருக்கிறார். அதிலிருந்து அவர் பாஸ்வேர்டை எளிதாக ஊகித்து விடலாமே.
இப்படிதான் பலரும் பாஸ்வேர்டை பகிர்ந்து கொண்டுள்ளனர். பாஸ்வேர்டை எப்படி வெளியே சொல்வது என புத்திசாலித்தனமாக கேட்டவர்கள் கூட, இல்லை உங்களை பாஸ்வேர்டு பலவீனமானதா என சோதிக்க வேண்டும் என கேள்விகளால் கொக்கி போட்டதும் பாஸ்வேர்டை சொல்லியிருக்கின்றனர்.
பாஸ்வேர்டு பற்றிய விழிப்புணர்வு இப்படிதான் இருக்கிறது என புரிய வைக்கும் இந்த நிகழ்ச்சியின் வீடியோ, ';வாட் ஈஸ் யுவர் பாச்ஸ்வேர்டு' எனும் பெயரில் யூடியூப்பிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
அநேகமாக இந்த நிலை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே பாஸ்வேர்டு பற்றி விழிப்புணர்வு பெறுவது அவசியம். பாஸ்வேர்டுக்காக விரிக்கப்படும் பொறியில் பலரும் எளிதாக சிக்கி கொள்கின்றனர் என்று நீண்ட காலமாக சொல்லப்பட்டும் வரும் விஷயத்தை இந்த வீடியோவும் மெய்பித்துள்ளது.
எனவே எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள். அதோடு பாஸ்வேர்டு போன்ற உலகப்புகழ் பெற்ற பாஸ்வேர்டுகளை பாஸ்வேர்டாக கொள்ளும் வழக்கத்தையும் உடனே மாற்றுங்கள்.
பாஸ்வேர்டு எச்சரிக்கை வீடியோ: https://www.youtube.com/watch?v=opRMrEfAIiI&list=RDopRMrEfAIiI#t=0
- சைபர்சிம்மன்

No comments:
Post a Comment