உலகின் மிகப் பெரிய....' என்னும் வரிசையில் இப்போது செல்ஃபியும் சேர்ந்து விட்டது. பங்களாதேஷில் 1,151 பேர் கொண்டு எடுக்கப்பட்ட மிகப் பெரிய செல்ஃபி உருவாகி விட்டது.
உலகின் மிகப் பெரிய செல்ஃபி என்ற பட்டத்தைப் பெறுவதற்கு, கின்னஸுக்குத் தயாராக நிற்கிறது இந்தப் புகைப்படம்.
‘லூமியா போனில் ஃப்ரன்ட் கேமரா குவாலிட்டி சுமாராகத்தான் இருக்கும்’ என்கிற குற்றசாட்டைச்
சரிசெய்ய, நோக்கியாவில் இருந்து மைக்ரோசாஃப்ட்டாக மாறிய செல்போன் நிறுவனம், இந்த அதிரடி விளம்பர செல்ஃபிக்கு ஏற்பாடு செய்திருந்தது. லூமியா 730 என்னும் மாடலில், உலகின் மிகப் பெரிய செல்ஃபி எடுக்க தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அறிவிப்பு செய்திருந்தது மைக்ரோசாஃப்ட்.
பல ஆயிரக்கணக்கில் பதிவு செய்தவர்களில் 1,151 பேரைத் தேர்வு செய்து, அவர்களுக்கு ஏரியா டு ஏரியா இலவச வைஃபை வசதி, மைக்ரோசாஃப்ட் லூமியா 730 போன்கள், சன் கிளாஸஸ், டூர் பேக்குகள் என்று பரிசுகளை வாரி இறைத்தது மைக்ரோசாஃப்ட்.
நல்லா வெளம்பரப்படுத்துறாய்ங்கய்யா!
- தமிழ்
No comments:
Post a Comment