போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Friday, November 28, 2014

அன்பார்ந்த டெக்னாலஜி மக்களே!

இது டெக்னாலஜி காலம். எல்லா அரசியல் கட்சிகளும் இந்தத் தொழில்நுட்ப விஷயங்களைத் தவறவிடுவது இல்லை. ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அப்ஸ் எனப்படும் அப்ளிகேஷன்ஸ் இருக்கின்றன. அவற்றில் என்னதான் இருக்கின்றன என்று எட்டிப் பார்த்தபோது...

தி.மு.க : முகப்பில் உதயசூரியன் சின்னம். உள்ளே கட்சி தொடர்பான செய்திகள், அறிக்கைகள், வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் முடிவுகள், கட்சி தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் என வழக்கமான விஷயங்கள் உள்ளன. ஆனால், பெரும்பாலான செய்திகள் ஸ்டாலினைச் சுற்றியே இருக்கின்றன. கலைஞரின் பேச்சு, ஸ்டாலினின் பிரசாரம் என மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வீடியோக்கள் பதிவேற்றப்பட்டிருக்க, அதில் தவறாமல் இடம்பெற்றிருக்கிறது அழகிரியை நீக்கி அறிக்கைவிடும் கலைஞரின் வீடியோ. இந்த அப்ளிகேஷனை இதுவரை டவுண்லோடு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 1,000. 5க்கு 4.2 ரேட்டிங் பெற்றிருக்கிறது இந்த அப்ளிகேஷன்.
கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் தனித்தனி அப்ளிகேஷன் இருந்தாலும் தி.மு.க அப்ளிகேஷன்களைத் தேடினாலே, முதலில் தென்படுவது ஸ்டாலினின் அப்ளிகேஷன்தான். கலைஞருக்கான அப்ளிகேஷனிலும் 'ஸ்டாலினுக்கு எழுதிய கடிதங்கள்’ என்ற பகுதி தனியாகவே உள்ளது. ஸ்டாலினின் அப்ளிகேஷனுக்கு கருத்து தெரிவித்திருப்பவர்களின் ஒருமித்த குரல். வேறென்ன? 'நாளை நமதே’தான்!
அ.தி.மு.க : நடப்பு அரசியலில் மட்டுமல்ல, அப்ளிகேஷன்களிலும் தி.மு.கவைவிட அதிக ஆக்டிவாக இருப்பது அ.தி.மு.கதான். கட்சிக்காக மட்டும் 10க்கும் மேற்பட்ட அப்ளிகேஷன்கள் உலவுகின்றன. தவிர, 'அம்மா’வின் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை தனி. முகப்பில் ஆரம்பித்து இறுதி வரை அனைத்து விஷயங்களும் அம்மா, அம்மா, அம்மாதான். குறைந்த எண்ணிக்கையிலேயே டவுண்லோடு செய்யப்பட்டிருந்தாலும் 5க்கு 5 ரேட்டிங் பெற்றிருக்கிறது அ.தி.மு.க மொபைல் அப்ளிகேஷன் (ஏதும் சூது இருக்குமோ?). தவிர, 'இந்த அப்ளிகேஷன் குறித்த உங்க கருத்து’ என்ற பகுதியில் கருத்து சொல்லாமல், அங்கேயும் 'அம்மா அம்மா’ என்றே கூவியிருக்கிறார்கள் விசுவாசிகள்!
தே.மு.தி.க : கட்சிக்குத் தனியாக அப்ளிகேஷன் எதுவும் இல்லை. ஆனால், தே.மு.தி.கவின் திருச்சி மாணவர் அணி செயலர் ஏ.எம்.ஜி.விஜயகுமார் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தனக்கென உருவாக்கிய அப்ளிகேஷனில் கட்சியின் வரலாறு, விஜயகாந்தின் சாதனைகள், கட்சியில் சேர்வதற்கான விண்ணப் படிவம் என்று கட்சிக்கான அப்ளிகேஷனாகவே உருவாக்கியிருக்கிறார். அ.தி.மு.கவின் அப்ளிகேஷனைப் போல குறைந்த அளவே டவுண்லோடு செய்யப்பட்டிருந்தாலும், 5க்கு 5 ரேட்டிங் பெற்றிருக்கிறது தே.மு.தி.கவின் மொபைல் அப்ளிகேஷன்!
பி.ஜே.பி : டெக்னாலஜி வித்தையை யார் கற்றுக்கொடுத்தார்களோ? அதை 'மொபைல் அப்ளிகேஷன்’களாக தாறுமாறாய் இறக்கிவைத்திருக்கிறது பி.ஜே.பி. ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் கிரிக்கெட் விளையாடுவது, ஓடி ஓடித் தேர்தலில் ஜெயிப்பது, ஸ்பைடர்மேனாக பறக்கும் மோடி... என கட்சி புகழ் பாடும் விளையாட்டு அப்ளிகேஷன்கள், கட்சிக்கான அப்ளிகேஷன்கள், மோடிக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட அப்ளிகேஷன்கள் என கம்ப்யூட்டரின் சர்வர் ஹேங் ஆகும் அளவுக்கு 200க்கும் அதிகமான மொபைல் அப்ளிகேஷன்கள் பி.ஜே.பிக்கு இருக்கிறது. ஒருவேளை இதுக்குப் பெயர்தான் 'டிஜிட்டல் இந்தியா’வோ?
கம்யூனிஸ்ட் கட்சிகள் : இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிகளின் அப்ளிகேஷன்கள் ஒரே மாதிரிதான். கட்சி தொடர்பான செய்திகள், வரலாறு என புதுமை எதுவும் இல்லாத வழக்கமான அப்ளிகேஷன்களாக இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கட்சி 4.6 ரேட்டிங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4.7 ரேட்டிங்கும் பெற்றிருக்கின்றன.
காங்கிரஸ் : ஸ்டாலினை முன்னிலைப்படுத்தினால், அது தி.மு.க கட்சியின் அப்ளிகேஷன். அதே வழியில் ராகுல்காந்தி முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தால், அதுவே காங்கிரஸின் மொபைல் அப்ளிகேஷன். கட்சியின் மீது மக்களுக்கு ஆர்வம் இல்லாததால், அப்ளிகேஷனில் 'ப்ளீஸ்... எப்படியாவது எங்க கட்சியில சேர்ந்திடுங்களேன்’ ரீதியிலான விஷயங்களுக்கே இடம் அதிகம். 1,000 பேர் அப்ளிகேஷனை டவுண்லோடு செய்திருக்கிறார்கள். ரேட்டிங் 4.5 தான். அதாவது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளைவிடக் குறைவு.
இந்திய ஜனநாயகக் கட்சி : எந்த இடத்திலும் காமெடி பண்ணுவதற்கென்றே சில பேர் இருப்பாங்க... அது மாதிரி பெரிய பெரிய கட்சிகளைத் தேடிப் பிடித்துக்கொண்டிருந்தபோது கண்ணில்பட்டதுதான் பாரிவேந்தரின் 'இந்திய ஜனநாயக கட்சி’யின் அதிகாரப்பூர்வ மொபைல் அப்ளிகேஷன். அடடே... பாரிவேந்தருக்கு ரேட்டிங் 4.8.
தேடிய வரை ம.தி.மு.கவுக்கும், பா.ம.கவுக்கும் மொபைல் அப்ளிகேஷன் இல்லை. சீக்கிரமே டெக்னாலஜிக்கு மாறுங்க பாஸு!
கே.ஜி.மணிகண்டன்

No comments:

Post a Comment