

நம்பமுடியவில்லை என்றால், இந்தப் படங்களைப் பாருங்கள். மேலோட்டமாகப் பார்ப்பதற்கு குரங்கு, ஜிராஃபி, ஸ்பைடர், ஆக்டோபஸ், கடல் குதிரை, பூச்சிகள் போல் தெரிகிறதா...

அவற்றை உற்றுப் பாருங்கள். அதில் ஒரு பெண் மாடலாக இருப்பதைக் காணலாம். 27 வயது எம்மா ஃபே, அழகு நிலையம் ஒன்றை நடத்துகிறார். இங்கு மாடலாக விரும்பும் பெண்கள்தான் அதிகம் வருகிறார்கள்.

அவர்களின் அனுமதி பெற்று, விலங்குகளின் உருவங்களை அப்படியே உடலில் வரைந்து, அதைப் புகைப் படங்களாக எடுக்கிறார். அந்தப் படங்களை, சும்மாவே வீட்டில் வைத்துக்கொள்ளாமல், சோஷியல் மீடியாவில் அப்லோட் செய்துவிடுகிறார்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, நிறையப் பேர் தமது உடலில் 'பாடி ஆர்ட்' வரையச் சொல்லி ஆர்வம்காட்டி வருகிறார்கள். ஒரு உடலில் ஓவியம் வரைய, 6 மணி நேரம் பிடிக்கிறது என்கிறார்.
- என்.மல்லிகார்ஜுனா
- என்.மல்லிகார்ஜுனா
No comments:
Post a Comment