போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Tuesday, November 11, 2014

ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் உயிரணு மூலம் ரஷ்ய பெண்கள் குழந்தைகள் பெற வேண்டும் ; அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆலோசனை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விந்தணுவை ரஷ்யாவிலுள்ள பெண்கள் பலருக்கு வழங்க வேண்டும் என அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். 
 ரஷ்யாவில் இராணுவ மற்றும் அரசியல் ரீதியாக சிறந்து விளங்கக்கூடிய புதிய சந்ததியை உருவாக்குவதற்காக தற்போதைய ஜனாதிபதி புட்டினின் உயிரணுவை ரஷ்ய பெண்களுக்கு வழங்க வேண்டும் என ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினரான யெலினா மிசௌலினா பொரிஸோவ்னா எனும் பெண் கூறியுள்ளார்.


அந்நாட்டின் பெண்கள், சிறார்கள், மற்றும் குடும்ப விவகாரத்துக்கான நாடாளுமன்ற குழுவின் தலைவியாகவும் யெலினா பொலிஸோவ்னா பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உயிரணுவை ரஷ்யப் பெண்களுக்கு வழங்குவதன் மூலம், ரஷ்யாவில் சிறந்த சந்ததியை உருவாக்குதுடன்   தேசாபிமானத்தையும் முன்னேற்ற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் யெலினா பொரிஸோவ்னா கூறியுள்ளார்.

ரஷ்யாவிலுள்ள அனைத்து பிரஜைகளுக்கும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் விந்தணு தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும். அந்த உயிரணுக்கள் மூலம் கர்ப்பிணியாகி குழந்தை பெறும் பெண்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என யெலினா பொரிஸோவ்னா ஆலோசனை கூறியுள்ளார்.

62 வயதான விளாடிமிர் புட்டின் 1999 ஆம் ஆண்டு ரஷ்ய பிரதமராக தெரிவானார். 2000 ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக பதவி வகித்த அவர் பின்னர் 2008 முதல் 2012 வரை பிரதமராக பதவி வகித்தார். 2012 மே மாதம் மீண்டும் அவர் ஜனாதிபதியாக தெரிவானார்.

1983 ஆம் ஆண்டு  லியூட்மிலா என்பவரை திருமணம் செய்த புட்டினுக்கு 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டுகளில் இரு மகள்கள் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment