“அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம்