Saturday, January 31, 2015
Thursday, January 29, 2015
Tuesday, January 20, 2015
பாஸ்வேர்டு விழிப்புணர்வை வலியுறுத்தும் வீடியோ!
உங்கள் பாஸ்வேர்டு என்ன என யாராவது கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? பாஸ்வேர்டை யாராவது வெளியே சொல்வார்களா? என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள். இதே கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால் நீங்கள் உங்களை அறியாமல் பாஸ்வேர்டை பகிரங்கமாக சொல்லிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
சந்தேகமாக இருந்தால், உங்கள் பாஸ்வேர்டு என்ன ? எனும் யூடியூப் வீடியோவை பார்க்கவும். இந்த வீடியோ உங்களை சிரிக்கவும் வைக்கும், சிந்திக்கவும் வைக்கும்.
Monday, January 19, 2015
கேமரா எமன்கள்!
பிரசாத்தும் சரண்யாவும் கல்லூரியில் படிக்கும்போதே காதலிக்க ஆரம்பித்தவர்கள். படிப்பு முடிந்தவுடன் இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள பன்னாட்டு கம்பெனி ஒன்றில் வேலை கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் ஆடம்பரமாகத் திருமணம் நடைபெற்றது. தங்களின் முதலிரவை ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில்தான் நடத்த வேண்டும் என்பது, திருமணத்துக்கு முன்பே அவர்கள் இருவரும் ஆவலுடன் எடுத்த முடிவு. அதன்படி, ஹைதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் முதலிரவைக் கொண்டாடினர். ஒன்றரை மாதங்கள் கழிந்த நிலையில், அந்த புதுமணத் தம்பதியரை பேரதிர்ச்சி ஒன்று
Friday, January 16, 2015
வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கி றேன்! அவ்வளவு அழுக்கு!!!
திரையுலகுக்கு புதிய பாதை தந்தவர்; வசனத்திலாகட்டும், நடிப்பிலாகட்டும், இயக்கத்திலாகட்டும் தனக்கென தனி பாணி வைத்திருப்பவர் பார்த்திபன். தன்னம்பிக்கையும் புதுமையின்மீதான ஈடுபாடும் எப்போதும் குறையாதவர். "கிறுக்கல்கள்' என்னும் பெயரில் "நறுக்' கவிதைகளை எழுதி, இலக்கியப் பிரியர்களின் இதயத்திலும் இடம்பிடித்துக்கொண்டவர். நான் அவுட்டேட் ஆளில்லை. அப்டேட்டட் ஆள் என "கதை திரைக்கதை வசனம் இயக்கம்' மூலம் நிரூபித்தவர். அவரை "இனிய உதயம்' இதழுக்காக சந்தித்தபோது... சுள்ளாய்ங்கன்னா சும்மாவா!
சசிக்குமாருக்கும் கேமராவுக்கும் ஆரம்ப காலத்தில் அவ்வளவு தூரம். பயோடெக்னாலஜி படித்தவர். அப்படியே ரூட் மாறி கிராபிக் டிசைனிங் பக்கம் வந்தார். பொழுதுபோக்காக கேமராவை எடுத்தவருக்கு, இன்று அடையாளமே அதுதான். அதை எப்படிப் பயன்படுத்துறதுன்னு இன்டர்நெட்ல படிச்சு தெரிஞ்சுகிட்டேன். பெரும்பாலான போட்டோகிராபர்கள் சென்னையில் தெருத்தெருவா சுத்தி ஸ்ட்ரீட் போட்டோகிராபி எடுப்பாங்க. கிராமம் பத்தி எடுக்கணும்னா, மதுரைப் பக்கம் போயிருவாங்க. இங்கேயே சென்னையைச் சுத்தி நிறையக் கிராமங்கள்Wednesday, January 14, 2015
'வி ஆர் தமிழன்ஸ்….' வெளிநாட்டினர் கொண்டாடிய வித்தியாசமான பொங்கல்!
நம்நாட்டு பாரம்பரியமிக்க பொங்கலை வெளிநாட்டினர் கொண்டாடுவது நம் பாரம்பரியத்துக்கு பெருமை. ஆண்டுதோறும் பொங்கல் சமயங்களில் வெளிநாட்டினர் சுற்றுலா வருவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்கும் ’ஆட்டோ சேலஞ்ச்’ என்ற சுற்றுலாப் பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது சென்னையிலுள்ள தனியார் சுற்றுலா நிறுவனம். Saturday, January 3, 2015
இடம் மாறும் எலும்புகள்! - விநோத நோயுடன் வாழும் ஜோஜோ
லண்டனைச் சேர்ந்த ஜோஜோ மெடோஸ் (Jojo Meadows) என்னும் 38 வயது பெண்ணுக்கு ஐந்து குழந்தைகள். இவருக்கு மிகவும் அரிதான எலர்ஸ் டான்லோஸ் சின்ட்ரோம் (Ehlers-Danlos Syndrome) என்னும் விநோத நோய் தாக்கியுள்ளது.
இந்த நோய் தாக்கப்பட்டவர்கள் கார் ஓட்ட முடியாது. வீட்டு கதவை திறக்க முடியாது. ஏன் கொட்டாவி கூட விட முடியாது. மீறிச் செய்ய முயன்றால் எலும்புகள் இடம் மாறி, பயங்கர வலியை ஏற்படுத்திவிடும். ஜோஜோ மெடோஸுக்கு ஒருநாளில் அதிகபட்சம் பத்து முறைக்கு மேல் எலும்புகள் இடம் மாறுவிடுகின்றனவாம். இந்த விநோத நோயால் இப்போது லைம் லைட்டுக்குள் வந்திருக்கிறார் ஜோஜோ மெடோஸ்.
Subscribe to:
Comments (Atom)


