பிரான்ஸின் பிரபல திரைப்பட இயக்குநர் ஜக்குவஸ் ஓடியேட் இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப்பனை விருதை வென்றுள்ளது.
பிரான்ஸில் நேற்றிரவு நடந்த கேன்ஸ் திரைப்பட விழா இறுதி நாள் நிகழ்ச்சியில் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. இதில் தீபன் திரைப்படத்துக்கு Palme d’Or என்ற கேன்ஸ் விழாவின் உயர் விருது அளிக்கப்பட்டுள்ளது.