போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Wednesday, December 17, 2014

பாம்பு என்றால் பயமில்லை!

ஒரே ஒரு டி.வி நிகழ்ச்சியின் மூலம் பரவலான பாராட்டுகளையும் அதற்கு நிகரான விமர்சனங்களையும் சந்தித்துவருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பால் ரோசலி. டிஸ்கவரி சேனலின் பிரபலமான 'ஈட்டன் அலைவ்’ நிகழ்ச்சிக்காக இவர் செய்த சாகசம்தான் காரணம். அப்படி என்ன செய்தார்?

சில நாட்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பான 'ஈட்டன் அலைவ்’ நிகழ்ச்சிக்காக ஒரு அனகோண்டா விழுங்குவதற்காகத் தன்னையே கொடுத்தது, அதை நிகழ்ச்சியாகப் படமெடுத்ததுதான் ரோசலியின் பயங்கர சாகசம். பெரு நாட்டில் உள்ள மழைக் காடுகளுக்குச் சென்று 26 அடி நீளமும் 181 கிலோ எடையும்கொண்ட அனகோண்டாவைத் தன்னுடைய குழுவினருடன் பிடித்துக்கொண்டு வந்திருக்கிறார் ரோசலி. அனகோண்டாவின் அழுத்தத்தினைச் சமாளிக்கும் உடை, படம்பிடிக்கும் கேமராக்கள், மேலும் உயிர்காப்புக் கருவிகளை உடலில் கட்டிக்கொண்டு, அனகோண்டாவுக்கு முழுவதுமாகத் தன்னை விழுங்கக் கொடுத்த ரோசலி, பாம்பின் உடலுக்குள் நடக்கும் மாற்றங்களைப் படம்பிடித்துக்கொண்டு உயிருடன் வெளியேறியிருக்கிறார். இவருடைய இந்த சாகசத்தை அசாத்தியமான சாதனை என சிலர் பாராட்டினாலும் மிக மிக ஆபத்தான இந்த முயற்சிக்கு இயற்கை ஆர்வலர்களும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ரோசலியோவோ, ''நானும் ஓர் இயற்கை ஆர்வலர்தான். அனைத்துப் பாதுகாப்பு வசதிகளோடு குறிப்பாக, என்னால் பாம்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாதபடிதான் இதைச் செயல்படுத்தியிருக்கிறேன். மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்ய வேண்டும் என்பது என் நீண்ட நாள் கனவு'' என்கிறார்.
சரி... யார் இந்த ரோசலி? தீவிரமான இயற்கை ஆர்வலர், எழுத்தாளர்.  அமேசான் காடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதுதான் உலகிலேயே அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மூன்றாவது சட்டவிரோதச் செயலாகும். அதைத் தனது ஆவணப்படங்கள், புத்தகங்களின் மூலம் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் ரோசலி. தீவிர அனகோண்டா பிரியரான இவர், இந்த வகைப் பாம்புகளின் பாதுகாப்புக்கும் வலுவிழந்துகொண்டிருக்கும் அதனுடைய வாழ்வாதாரத்துக்காகவும் தொடர்ந்து போராடி வருபவர்!
கே.ஜி.மணிகண்டன்

No comments:

Post a Comment