சென்னை: நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோரது வீடுகளில் வருமானவரித் துறையினர் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 கோடி ரொக்கம் உள்பட ரூ. 100 கோடிக்கும் மேல் கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள், ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களில் பல நடிகர், நடிகைகள் சொத்துக்களை ஏராளமாக வாங்கிக் குவித்ததாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் வந்தன.