போட்டோ டிசைனிங் - அல்பம் குறைந்த விலையில்

Thursday, October 30, 2014

வெங்காய பஜ்ஜி!

சுவையான வெங்காய பஜ்ஜி செய்வதற்கான சமையல் குறிப்பு!

தேவையான பொருட்கள்


பெரிய வெங்காயம் -  3
கடலைமாவு – 1  கப்
அரிசிமாவு – 1 மேசைக்கரண்டி
சோடா உப்பு – அரை சிட்டிகை
மிளகாய்த்தூள் – 1  தேக்கரண்டி
சீரகம் – 1 /2  தேக்கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு  வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்து எடுத்து,  சூடான எண்ணெயில் இருபுறமும் பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment